தமிழ்க் கடவுள், குறிஞ்சி நில தெய்வம் என வருணிக்கப்படும் முருகனுக்கு உலகிலேயே உயரமான சிலை சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அருகே உள்ளது. அதன் பின்புறம் பல நூற்றாண்டு பழமையான முருகன் கோவில் ஒன்றும் உள்ளது. தமிழ்மன்ற மாணவர்களில் ஆர்வமுள்ள 160 மாணவர்களும் 8 ஆசிரியாகளும் கோவிலைப் பார்வையிட 26.10.24 (சனிக்கிழமையன்று) சென்றனர். காலை பத்து மணியளவில் பள்ளி வளாகத்திலிருந்து பள்ளி பேருந்தில் புறப்பட்டு முத்துமலை கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்த பின் கோவில் வரலாற்றையும் சிலையின் வடிவத்தையும் அறிந்து கொண்டனர் .
கோவில் நிர்வாகிகளிடம் தமிழ்க்கடவுள் முருகனின் சிறப்புகளைக் கேட்டறிதல். முருகன் கோவிலைப் பார்வையிட்டு தகவல்களைச் சேகாித்தனர்;. மதியம் 2.30 மணியளவில் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினர். சேகாித்த தகவல்களைக் கொண்டு மாணவர்கள் அறிக்கை தயார் செய்தனர்
2023 senthil public school salem. all rights reserved. designed by aatmia.