ஆத்திசூடி , கொன்றைவேந்தன் - ஒப்புவித்தல் போட்டி

ஆத்திசூடி , கொன்றைவேந்தன் - ஒப்புவித்தல் போட்டி

05-Jan-2024

பொங்கல் திருநாள் தமிழ் இலக்கிய போட்டி மணவர்களின் திரனக்கு சவாலாக அமைந்தது.

🌹 பொங்கல் திருநாள் தமிழ் இலக்கிய போட்டி- ஸ்ரீ கிருஷ்ண சேவா சமிதி -சேலம் . நடத்திய ஆத்திசூடி , கொன்றைவேந்தன் ஒப்புவித்தல் போட்டி மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 05.01.2024 அன்று நடைபெற்றது.அதில் செந்தில் பப்ளிக்  பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.(மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவ ,மாணவியர்கள்)

🌹 அதில், செந்தில் பப்ளிக் பள்ளி, மூன்றாம் வகுப்பு -எ பிரிவு மாணவர் J.B.ஜானவ் ஆத்திசூடி ஒப்புவித்தல் போட்டியில் முதல் இடத்தையும்,மூன்றாம் வகுப்பு - ஈ பிரிவு A.அக்ஷிதி ஆறுதல் பரிசு-1  பெற்றுள்ளார்.

🌹 மேலும், கொன்றைவேந்தன் ஒப்புவித்தல் போட்டியில் ஐந்தாம் வகுப்பு -ஊ பிரிவு மாணவி K.பிரகதி இரண்டாம் இடத்தையும்,நான்காம் வகுப்பு - உ பிரிவு மாணவர் கௌதம் குருதேவ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.

🌹இப்போட்டியில் நான்கு பள்ளிகள் கலந்து கொண்டன.செந்தில் பப்ளிக்  பள்ளி மாணவர்கள் ஆத்திசூடி ஒப்புவித்தல் போட்டியில் முதல் மற்றும் ஆறுதல் பரிசையும்,கொன்றைவேந்தன் ஒப்புவித்தல் போட்டியில் இரண்டாம்,மற்றும் மூன்றாம் பரிசையும் பெற்றுள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்