பாரம்பரிய உணவுத் திருவிழா

பாரம்பரிய உணவுத் திருவிழா

27-Jul-2024

💐வகுப்பு:ஐந்து "சாமை சோறு ஆமை ஆயுள்! குதிரைவாலி தந்திடுமே குறைவில்லா வாழ்வு! கோல் ஊன்றி நடப்பவரும் கம்பங் கூழால் கால் ஊன்றி நடப்பார்! ராகியில் பலகாரம் கால்சியத்தின் அதிகாரம்! சிறுதானியத்தை உண்போம்! வளமாய் வாழ்வோம்💪"

சிறுதானியஉணவு கண்காட்சியில்  மாணவ, மாணவியரால் தயாரிக்கப்பட்ட சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டன. மூன்று மற்றும் நான்காம் வகுப்புமாணவ, மாணவியர் கண்காட்சியில் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். சிறுதானியம் போன்ற பண்பாட்டு உணவுகள்இன்று புழக்கத்தில் இல்லை. அதைத் தவிர்த்துநாம் இன்று நூடுல்ஸ், பாஸ்தாபோன்ற உணவு வகைகளை உட்கொள்கிறோம். துரித உணவு உண்பதால் ஏற்படும்தீமைகளையும், சிறுதானிய உணவு உண்பதால் ஏற்படும்நன்மைகளையும் தெளிவாக ஐந்தாம் வகுப்புமாணவ, மாணவியர் விளக்கினார்கள். சிறுதானியத்தின் சிறப்புகளை மாணவ ,மாணவியர் அறிந்துகொள்ள இக்கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர்,  ஒருங்கிணைப்பாளர்கள், பாடத்துறைத் தலைவிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு கண்காட்சியை சிறப்பித்தனர்.

💪சிறுதானியங்களை

ஒதுக்கினோம்!

பெருவியாதிகளில் சிக்கினோம்!