முகமூடி மாட்டு நடித்துக் காட்டு !

முகமூடி மாட்டு நடித்துக் காட்டு !

27-Jun-2024

" கானகத்தில் இருக்கும் விலங்குகளை போல் முகமூடி அணிந்து நடித்துக் காட்டும் எமது மழலைச் செல்வங்கள் "

இரண்டாம்வகுப்பில்  முகமூடி  மாட்டு  நடித்துக்காட்டு என்ற தலைப்பிற்கு ஏற்ப  ஆசிரியர்களிடம்இருக்கும் முகமூடியை மாணவர்களிடம் ஏற்கனவே  காட்டிவிருப்பம் உள்ளவர்கள் முகமூடியை எடுத்து வருமாறு கூறினோம். அதன்படி இன்று (27.6.2024) இதற்கான செயல்பாடு நடைபெற்றது. குழந்தைகளை மைதானத்திற்கு அழைத்துச் சென்று பலவகையான முகமூடிகளை அணிவித்து  உற்சாகப்படுத்தினோம். குழந்தைகள் ஆர்வத்தோடு நடித்துக் காட்டி விலங்குகளின் ஒலி, இருப்பிடம், உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டனர்.