பட்டம் பறக்குது

பட்டம் பறக்குது

25-Jun-2024

" காற்றாக இருந்தால் தடுக்க முடியாது என்று எண்ணி தடைகளை உடைத்து விண்ணைத் தொடும் முயற்சியில் எமது மழலைகளின் பட்டங்கள் "

         பட்டம் பறக்குது என்ற பாடலுக்காக  இரண்டாம்வகுப்பு  குழந்தைகளை  முன்னரேபட்டம் செய்து வரும்படி கூறினோம். அதன்படி இன்று (25.06.2024)  குழந்தைகளைமைதானத்திற்கு அழைத்து சென்று  அவர்கள்கொண்டு வந்த   வண்ணவண்ண பட்டங்களை வைத்து  பாடலைப்பாடி  மிகுந்தஉற்சாகத்துடன் பட்டங்களை பறக்க விட்டு  மகிழ்ந்தனர். இதன் மூலம் காற்றின் திசைக்கேற்ப பட்டங்கள் பறக்கும் என்ற கருத்தையும் புரிந்து கொண்டனர்.